Archive

Archive for July, 2010

காணாமல் போகும் நீர் நிலைகள் ஏரி…யா? இது எங்க ஏரியா!

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

நீரின்றி அமையாது உலகு – தண்ணீரின் மகத்துவத்தை உணர்த்த இதை விட வேறு வாக்கியம் தேவையில்லை. நாட்டின் வளம் சார்ந்தது என்பதால், அதன் அவசியத்தை உணர்ந்து, கடப்பா முதல் கன்னியாகுமரி வரை ஏரி, குளங்களை வெட்டி வைத்துள்ளனர். அதிலும் ஏரியின் சிறப்பை இன்றும் உலகம் வியக்கிறது. சிறந்த மழைநீர் சேமிப்பு முறையான ஒரு ஏரியில் தண்ணீர் நிரம்பினால், கால்வாய் மூலமாக இன்னொரு ஏரிக்கு தண்ணீர் போகும். அங்கிருந்து இன்னொரு ஏரி. பக்கத்தில் ஆறு, குளம் இருந்தால் அவையும் ஏரிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இப்படியே கடற்பகுதி வரை ஏரிகளும் அதன் கால்வாய்களும் நீண்டு இருந்தன. அதனால் ஒரு பகுதியில் வெள்ளம் வந்தாலும், வறட்சியான இன்னொரு பகுதியும் வளமாக இருக்க முடிந்தது. ஏதாவது ஒரு ஏரியில் இருந்து கால்வாயை ஒட்டி உங்கள் பயணத்தை தொடங்கினால் கிழக்கு கடற்கரையை வந்து சேரலாம். யாரிடமும் முகவரி கேட்கத் தேவையில்லை. அத்தனை அருமையான மழைநீர் சேகரிப்பு, நீர் பாசன கட்டமைப்பை அந்த காலத்திலேயே கட்டியிருக்கின்றனர்.

ஏரிகளை மட்டுமல்ல கயம், வாவி, தடாகம், பொய்கை, குட்டம், குளம், கிடங்கு, மடு என விதவிதமான நீர்நிலைகளை உருவாக்கி, மழைநீரை சேமித்து முப்போகம் விளைவித்து, பல போகம் பெருமையுடன் வாழ்ந்த தமிழ்நாட்டில் இப்போது ஆழ்துளை போட்டு தண்ணீரை தேடிக் கொண்டிருக்கின்றனர். யானை கட்டி போராடிக்கும் அளவிற்கு விவசாயம் செழிக்க தண்ணீர் வைத்திருந்த தமிழகத்திற்கு என்ன பிரச்னை? வந்தது எப்படி? ஏன்?

நீர் நிலைகளின் எண்ணிக்கை குறைந்ததுதான் முதல் காரணம். நாகரீக வளர்ச்சிக்கும், மக்கள் தொகை பெருக்கத்திற்கும் ஏற்ப விவசாய நிலங்களுக்கு முன்பாக காணாமல் போவது நீர்நிலைகள்தான். தண்ணீர் இல்லை என்று விளை நிலங்களும் வீட்டுமனைகளாகி விடுகின்றன. இப்படி ஆறு, ஏரி, குளங்கள் அதற்கான இணைப்பு கால்வாய்களும் ஒவ்வொன்றாக காணாமல் போனதால், எஞ்சிய நீர்நிலைகளும் வற்றிப் போய் கிடக்கின்றன. விளைவு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது.
அதனால் 10, 20 அடி ஆழத்திற்கு கிணறு வெட்டி விவசாயம் செய்தவர்கள் இன்று 100, 200 அடிக்கு ஆழ்துளை கிணறு போட்டு தண்ணீரை உறிஞ்சுக் கொண்டிருக்கின்றனர். ஆழ்துளை கிணற்றின் ஆழம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கூடவே கிணற்றின் ஆழமும் 300, 350 அடிகள் என்று அதிகரித்துக்  கொண்டே போகிறது.

விவசாயத்திற்கு மட்டுமல்ல; குடிக்கும் தண்ணீருக்கும் ஆழ்துளை கிணறுகள்தான் கதி. விவசாய நிலங்கள் வீட்டுமனைகள் ஆனதும் மனைக்கு ஒரு ஆழ்துளை கிணறு கட்டாயமாகி விட்டது. ஒரு ஏக்கரில் குறைந்தது 20 ஆழ்துளை கிணறுகள், நீரை உறிஞ்ச ஆரம்பிக்கின்றன. நகர விரிவாக்கத்தினால் அடுக்குமாடி குடியிருப்புகள் என்று இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வீட்டுமனை ஆகாமல் பக்கத்திலிருக்கும் விவசாய நிலங்களும் வீணாகி விடுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போகும் நீர்நிலைகளின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. இதை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு நீர்நிலைகளை காப்பாற்றா விட்டால், எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.

குளம் குட்டையில் குடியிருப்புகள்

சென்னை, சென்னை புறநகர் பகுதிகளில் ஒரு காலத்தில் 200 ஏரிகள் இருந்தனÕ என்கிறார் கிண்டி பொறியியல் கல்லூரியின் நீர்வளத் துறையின் முன்னாள் இயக்குனர் பேராசிரியர் கார்மேகம். உதாரணத்திற்கு பூந்தமல்லி & போரூர்&காரம்பாக்கம் & வளசரவாக்கம்&மேட்டுக்குப்பம் & விருகம்பாக்கம்& சாலிகிராம்&புலியூர் & கோடம்பாக்கம்& நுங்கம்பாக்கம் & மயிலாப்பூர் என வரிசையாக ஏரிகளும், அவை கால்வாய்களாலும் இணைக்கப்பட்டிருந்தன. இன்று சென்னையில் ஏரிகளும் இல்லை, அவற்றை இணைத்த கால்வாய்களும் இல்லை,

ஆனால் நுங்கம்பாக்கத்தில் லேக் வியூ ரோடு, மாம்பலத்தில் லேக் வியூ தெரு, ஆதம்பாக்கத்தில் ஏரிக்கரை சாலை என நீர்நிலைகளின் பெயர்கள் மட்டும் மிச்சம். நீர்நிலைகளின் ஓரங்களில் ஆரம்பித்த ஆக்கிரமிப்புகள் கொஞ்ச நாட்களில் மொத்தத்தையும் சுருட்டி விடுகின்றன. பிரச்னை வராமல் இருக்க அவ்வப்போது ஆட்சியில் இருக்கும் தேசிய, மாநிலத் தலைவர்களின் பெயர்களில் ஆக்கிரமிப்பு நகர்கள் உருவாகி வருகின்றன. சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதுதான் நிலைமை. இப்போது தோன்றியிருக்கும் புதிய நகர்களில் 47 சதவீதம், நீர்நிலைகளை மூடி உருவாக்கப்பட்டவை என்கிறது “வட்டம்” என்ற அமைப்பு.

வெள்ளைக்காரன் போட்ட பாதை

ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில்தான் முதல் முதலாக நீர்நிலைகள் மற்றத் தேவைகளுக்காக ஆக்கிரமிக்கப்பட்டன. அதற்கு முதலிடம் ரயில் பாதை. தொலைவை மிச்சப்படுத்த சுற்றிச் செல்லாமல் முக்கிய நகரங்களை இணைத்து ரயில்பாதை போடப்பட்டது. அதற்காக ஏரி, குளம் என நீர்நிலைகளின் நடுவே ரயில்பாதை  அமைக்கப்பட்டது. அதனால் நீர்நிலைகள் இரண்டாக பிரிந்தன. குறைவாக பிரிந்த பகுதியை ஊர் பெரியவர்கள் நிலமாகவும், குடியிருப்பாகவும் மாற்றிக் கொண்டனர். சென்னையில் இருந்து பெங்களூரோ, மும்பையோ, கன்னியாகுமரியோ, புதுடெல்லியோ எந்தப் பக்கம் ரயிலில் பயணித்தாலும் இப்படி நீர்நிலைகள் ரயில்வே புண்ணியத்தில் குடியிருப்புகளாக மாற்றப்பட்டிருப்பதை கவனிக்கலாம். நீர்நிலைகளை அழித்து விடக்கூடாது என்பதற்காக, ரயில் பாதையின் இடையில் கால்வாய்கள் அமைத்து இரண்டு பக்கத்திற்கும் தொடர்பை விட்டு வைத்தனர் வெள்ளைக்காரர்கள்.

கூவம் தண்ணீரை குடிக்கும் மக்கள்

ஆச்சரியமாக இருக்கும். ஆனால் இது உண்மை. வேலூர் மாவட்டத்தில் இருந்து வரும் கல்லாறு, திருவள்ளூர் மாவட்டத்தில் கூவம் என்ற ஊரில் பிரிவதால் அதை கூவம் ஆறு என்று அழைத்தனர். சென்னைக்குள் நுழையும் வரை இன்றும் கூவம் ஆறு சுத்தமான ஆறுதான். சென்னைக்குள் வந்த பிறகு கழிவுகளையும், குப்பைகளையும் சேர்த்து கூவம் என்றாலே மூக்கைப் பிடிக்க செய்து விட்டனர். சென்னையின் தேம்ஸ் நதி என்று புகழ் பெற்றது கூவம். இன்றும் 50 வயதை கடந்த சென்னைவாசிகளை கேட்டால் கூவத்தில் குளித்த சுக அனுபவத்தை சொல்லி மகிழ்வார்கள். இன்றும் கூவம் ஆற்றில் இருந்து தண்ணீரை எடுத்து கூவம் கிராமத்தை  சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த கூவம் மட்டுமல்ல; சென்னையில் பாயும் அடையாறும் ஆக்கிரமிப்புகளில் காணாமல் போய் கால்வாயாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த பட்டியலில் பக்கிங்காம், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம், மாம்பலம் உட்பட 19 கால்வாய்களும் இடம் பிடித்துள்ளன. இப்படி இயற்கையாக அமைந்த கால்வாய்கள் இல்லாமல் போவதால் மழைக்காலங்களில் சென்னை மிதக்கிறது. சென்னையில் மட்டும் 93.84 நீளத்திற்கு ஆறுகளும், கால்வாய்களும் இரு பக்கமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.

விவசாயம் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு

கோடைக் காலங்களில் வற்றிப் போயிருக்கும் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளின் சேற்றுப் பகுதிகளில் வெள்ளரி போன்ற குறுகிய கால பயிர்களை பயிரிடுவார்கள். இதற்கு கிராம நிர்வாக அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். இது பழங்கதை. மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் அளவு குறையும்போது இப்படி பயிர் செய்வதை செய்திகளில் பார்த்து இருக்கிறோம். ஆனால் அணையில் நீர் நிரம்பினால் பயிர் செய்வது இயல்பாகவே தடைப்பட்டு விடும். நீரில்லாமல் இருக்கும் நீர்நிலைகளில் பயிர் செய்யும் ஊர் பெரிய மனிதர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் அப்படியே பட்டா வாங்கி விடுகின்றனர்.

ஏரியில் தண்ணீர் நிரம்பி பயிர் மூழ்கும் நிலை வந்தால் கரையை உடைத்து விடுவார்கள். இதனை பஞ்சாயத்து தலைவர்களோ, வருவாய் துறையினரோ கண்டுகொள்ள மாட்டார்கள். பயிர் தானே என்று விட்டால் கொஞ்ச நாட்களில் வீட்டுமனையாக மாறிவிடும். அப்புறம் நீர் நிலை இருக்காது. இதற்கு பஞ்சாயத்து தலைவர்களும், வருவாய்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள். அரக்கோணம் செல்லும் மார்க்கத்தில் ஏகாட்டூர்&கடம்பத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையில் தெற்கு திசையில் ஒரு ஏரி முழுவதும் வயல்காடாய் மாறியிருப்பதை பார்க்கலாம். ஏரி என்பதற்கு சாட்சியாய் கொஞ்சம் கரை மட்டும் இருக்கிறது.

பறக்கும் ரயிலால் பாழான பக்கிங்காம் கால்வாய்

கடல் கொந்தளிக்கும்போது வெளியேறும் தண்ணீர் ஊருக்குள் வெள்ளமாக வந்து விடுவதை தடுக்கவும், மழைநீர் வடிகாலாகவும், நீர் வழி போக்குவரத்துக்காகவும் அமைக்கப்பட்டுதுதான் பக்கிங்காம் கால்வாய். வடபெண்ணை பாயும் நெல்லூரில் இருந்து தென்பெண்ணை பாயும் கடலூர் வரை, சென்னை வழியாக கடற்கரையில் இருந்து ஓரிரு கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டது தான் இந்த கால்வாய். இதில் உப்பு, காய்கறி, விறகு ஆகிய சரக்குப் போக்குவரத்துடன் பயணிகள் போக்குவரத்தும் இருந்தது. அதுவும் இரவு நேரத்தில் நிலவொளியில் படகு பயணம் செய்வது சுகமாக இருக்குமாம்.

புயலால் 1970களில் கால்வாய்கள் சீர்குலைய படகு போக்குவரத்து நின்றது. பெருகிய மக்கள் தொகையின் கழிவுநீர் கால்வாயாக மாறிப் போனது. குப்பையால் தூர்ந்த பகுதிகள் வசதியை தொலைத்தவர்களின் வாழ்விடமாக மாறின. அந்த குடிசைகளும் விற்கப்பட்டு கோபுரமாக மாறின. இந்த நிலையில்தான் தெற்கு ரயில்வே பறக்கும் ரயில் திட்டத்தை 1980களின் இறுதியில் தொடங்கியது. இதுவரை 19 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்ட பறக்கும் ரயில் மார்க்கத்தில் பூங்கா நகரில் இருந்து திருவான்மியூர் வரை 12 கிமீ தூரம் பக்கிங்காம் கால்வாய் தூர்க்கப்பட்டே அமைக்கப்பட்டுள்ளது. அதனால் வட சென்னையில் அகண்ட கால்வாயாக இருக்கும் பக்கிங்காம் கால்வாய், தென்சென்னையில் ஆடு தாண்டும் கால்வாயாக சுருங்கிப்போய் கிடக்கிறது. மழைக்காலங்களில் சென்னை வெள்ளக்காடாய் மாற இதுவும் ஒரு காரணம்.

கடல் கூட தப்பவில்லை

நீர்நிலைகளில் பெரியதான கடல் கூட இந்த ஆக்கிரமிப்பு ஆசாமிகளிடம் இருந்து தப்பவில்லை. சமீபத்தில் தேவதாஸ் என்ற ரியல் எஸ்டேட் புரோக்கர், பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சுமார் 120 ஏக்கர் நிலத்தை விற்றுள்ளார். வாங்கியவர்கள் நிலத்தை பார்க்கப்போனபோது அதிர்ந்து விட்டனர். காரணம் சுமார் 80 ஏக்கர் நிலம் கடலில் இருந்துள்ளது. கிழக்கு கடற்கரை முழுவதும் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை காலியாக இருந்தன. இப்போது பங்களாக்களும், பண்ணை வீடுகளும் இருக்கின்றன. இவர்களுக்கு யார் விற்றது, எப்படி பட்டா கிடைத்தது என்பது தொடரும் ஆச்சரியம்.

Categories: Special

ஜவான் கட்டிடத்தில் கார்கில் தின அஞ்சலி

தஞ்சை காந்திஜி ரோட்டில் உள்ள ஜவான் கட்டிடத்தில் தஞ்சை மாவட்ட முன்னாள் படைவீரர் சங்கம் சார்பில் கார்கில் தின அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.

கடந்த 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் வீரமரணம் அடைந்த இந்திய படை வீரர்களுக்கு நினைவு அஞ்சலி மற்றும் வீரவணக்கம் செலுத்தும் முகமாக நேற்று தஞ்சை ஜவான் கட்டிடத்தில் முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலியுடன், வீரவணக்கம் செலுத்தினர்.

ஓய்வு பெற்ற கர்னல் அரசு தலைமை வகித்தார். லெப்டினென்ட் கமாண்டர் மயில்வாகனன், சுபேதார்கள் தங்கசாமி, மணிவண்ணன், பாலகிருஷ்ணன், சார்ஜண்ட் சண்முகசுந்தரம், ஹவில்தார் புஷ்பராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். நேற்று மாலை அனைத்து முன்னாள் படைவீரர் வீட்டிலும் மெழுகுவர்த்தி ஏற்றி மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Categories: Public

யார் கூட்டணி வைத்தாலும் மக்கள் ஜெயக்கப்பொவது இ‌ல்லை.

“நீங்களஎதிர்ப்பார்க்குமகூட்டணி அமையும்” என்றகோவையிலதனதகட்சியினரபிரம்மாண்டமாகக‘கூட்டி’ககூட்டத்தில் அ.இ.அ.ி.ு.க. பொதுசசெயலரஜெயலலிதகூறியதஅக்கட்சியினதொண்டர்களஉற்சாகத்திலமிதக்கவிட்டதமட்டுமின்றி, ஆளுமி.ு.க. உட்பகட்சிகளினதலைவர்களகூட்டணி தொடர்பாபலமாகசசிந்திக்கவுமவைத்துள்ளது. திருவாளரபொதுஜனமுமகூட்டணி எப்படி அமையுமாமஎன்றதனபங்கிற்ககையிலஒரசொத்தவாக்கவைத்துககொண்டமற்றவர்களுடனவிவாதித்தவருகிறார்.

‘சும்மகொளுத்தி போடு’ என்பதபோலத்தான‘நீங்களஎதிர்ப்பார்த்கூட்டணி அமையும்’ என்றஜெயலலிதகூறியது. ஆனாலுமஅவரகூறிவார்த்தைகளஅரசியலதலைவர்களையும், அரசியலநோக்கர்களையும், பத்திரிக்கையாளர்களையுமசுறுசுறுப்பாக்கியுள்ளதஎன்பதமட்டுமநிதர்சனமாகததெரிகிறது.

ஆளுமகட்சியாி.ு.க.தானஇதிலபெரிதுமஅச்சமுற்றிருப்பதாஅரசியலவட்டாரங்களகூறுகின்றன. ஏனெனிலஅவர்களினஆட்சியதக்கவைத்துக்கொள்இன்றளவிலகாங்கிரஸவிட்டாலவேறநாதியில்லஎன்நிலை. தமிழசட்டபபேரவையில் 100 உறுப்பினர்களைககொண்டிருந்தாலும், காங்கிரஸஆதரவஇல்லாமலஅடுத்ஓராண்டிற்ககதஓடாதஎன்பதஅக்கட்சியினதலைமநன்கபுரிந்துகொண்டுள்காரணத்தினால்தான், கிடைக்கிமேடைகளிலபேசுகிகாங்கிரஸகட்சியினதமிழகத‘தலைவர்கள்’ ஏகத்திற்கஏகடியமபேசியுமி.ு.க. தலைமவாயைபபொத்திக்கொண்டஅமைதி காக்கிறதஎன்கிறார்கள். அந்அளவிற்ககூட்டணி அழுத்தத்திலஇருக்கிறதஆளுமகட்சியாி.ு.க.

ி.ு.க.விற்கஅளித்துவருமஆதரவகாங்கிரஸகட்சி விலக்கிக்கொண்டால், அடுத்சட்டபபேரவைததேர்தலவருமவரஅந்தககட்சியினதலைமையிலஆட்சி அமைவதற்கஆதரவஅளிக்கககூட அ.இ.அ.ி.ு.க. தயாராஇருக்கிறதஎன்பேச்சடெல்லி வட்டாரத்திலஓராண்டிற்கமுன்னரவலமவந்தது. அப்படி ஒரநிலஏற்பட்டாலகாங்கிரஸஆட்சிக்கஆதரவநல்கிபாட்டாளி மக்களகட்சியுமதாயாராஇருந்ததஎன்றுமகூறப்பட்டது.

அ.ி.ு.க. – ே.ு.ி.க. கூட்டணி சாத்தியமா?

‘நீங்களஎதிர்ப்பார்த்கூட்டணி அமையும்’ என்று அ.இ.அ.ி.ு.க. பொதுசசெயலரஜெயலலிதகூறியதனபொருளஎன்ன? இதஅக்கட்சியினமேல்மட்டததலைவர்களமுதலஅடிமட்டததொண்டர்களவரஎழுந்துள்கேள்வியாகும். கூட்டணியில்லாமலஆட்சியில்லஎன்பதஜெயலலிதாவைபபோஅக்கட்சியினதொண்டர்களுமநன்குணர்ந்துள்ளதால், அந்தககூட்டணி யாருடனஎன்பதற்கவிடதேஅவர்களுமதங்களபங்கிற்கவிவாதித்துககொண்டிருக்கின்றனர்.

அந்தககூட்டணிககட்சி எது? காங்கிரஸஅல்லதஆரம்பித்த 5 ஆண்டுகளிலசற்றேறக்குறைய 10 விழுக்காடவாக்குகளைபபெற்றுபபலமவாய்ந்மூன்றாவதஅரசியலகட்சியாவளர்ந்துள்விஜயகாந்தினதேசிமுற்போக்குததிராவிகழகமா? இந்இரண்டிலஎதோடகூட்டணி அமைந்தாலுமஅதவெற்றிககூட்டணிதானஎன்பது அ.இ.அ.ி.ு.க. தொண்டர்களகருத்து.

அ.இ.அ.ி.ு.க.விற்குமே.ு.ி.க.விற்குமஇடையகூட்டணி குறித்ததொடர்ந்தபல்வேற‘தொடர்ப’களினமூலமபேச்சுவார்த்தநடந்தவருவதஊடுருவிசசெய்திகளைசசேகரிக்குமபத்திரிக்கையாளர்களும், அதஅளவிற்க‘தொடர்ப’களைககொண்அரசியலநோக்கர்களுமநன்கஅறிவர். ஆனாலஇவ்விரகட்சிகளுமகூட்டணிக்கவருமசாத்தியமமிமிகககுறைவஎன்றஇரதரப்பினருமகருதுகின்றனர். அதற்கஅவர்களகூறுமஒரகாரணம்: ஜெயலலிதா, விஜயகாந்தஇருவருமபிடிவாகுணமகொண்டவர்களஎன்பதுதான். நான்தானமுதலமைச்சரஎன்பதிலவிஜயகாந்தினபிடிவாதமஇக்கூட்டணிததொடர்பாபேச்சுகளமுதற்கட்டத்தைததாண்டி நகர்த்முடியாமலதடுக்கிறது. இதமுன்பிருந்நிலை.

இப்போதவிஜயகாந்தினநிலசற்றதளர்ந்துள்ளதாகவுமஅந்தத‘தொடர’புகளகூறுகின்றன. வெற்றிக்குததேவகூட்டணி என்பதஅவரஉணர்ந்துள்ளார். ஆனாலகணிசமாதொகுதிகளே.ு.ி.க.விற்கவழங்வேண்டுமஎன்றஅவரஎதிர்ப்பார்க்கிறாரஎன்றகூறப்படுகிறது. அதற்கஅடிப்படையாஅவர்களகூறுவது: நாங்களசேருமகூட்டணி வெற்றிககூட்டணியாகுமஎன்பது. அதற்கவிலை? குறைந்தது 100 தொகுதிகள்! இந்தபபேரமுமமுதற்கட்டத்ததாண்டி பேச்சுவார்த்தையமுன்னெடுக்முடியாமலதடுத்துவிடுகிறதாம். ஆனால், ே.ு.ி.க. கட்சி வட்டாரங்களஇதனநியாயமாபேரமஎன்கின்றனர். அதற்கஅவர்களகூறுமகாரணம்: கூட்டணி அமைந்தால் 50 முதல் 60 தொகுதிகளிலநிச்சயமவெற்றி பெருமஅளவிற்ககட்சி + வேட்பாளரபலமே.ு.ி.க.விற்கஉள்ளது. கூட்டணி பலத்திலமேலும் 40 தொகுதிகளஎன்பதஎட்டாக்கனியல்ல, ஆகவதங்களதலைவரவிஜயகாந்தினபேரமநியாயமானதஎன்றகூறுகின்றனர்.

இதில் அ.இ.அ.ி.ு.க. கணக்கஎன்ன? என்றறிசுற்றிவந்தபோதகிடைத்பதில்: அதிகபட்சமாக 60 முதல் 70 தொகுதிகள். ஜெயலலிதாவைபபொறுத்தவரகாங்கிரஸஇல்லாநிலையிலே.ு.ி.க.வுடனாகூட்டணி நிச்சயமதன்னஆட்சியிலஅமர்த்திவிடுமஎன்பதிலஉறுதியாஉள்ளாரஎன்றஅக்கட்சி வட்டாரங்களகூறுகின்றன. ே.ு.ி.க.விற்கு 70 இடங்களகொடுத்தாலும், இரண்டகம்யூனிஸ்டகட்சிகள், மறுமலர்ச்சி ி.ு.க. ஆகியவற்றிற்கு 25 முதல் 30 தொகுதிகளபகிர்ந்தளித்துவிட்டு, மீதமுள்ள 130 முதல் 135 தொகுதிகளிலபோட்டியிட்டாலும், பலமாகூட்டணி அமைவதாலபெரும்பான்மகூசாத்தியமஎன்று அ.இ.அ.ி.ு.க. தலைமகணக்கிடுவதாகககூறப்படுகிறது. இது 2001ஆமஆண்டசட்டபபேரவைததேர்தலஒட்டிகணக்காகும். அந்தததேர்தலிலகாங்கிரஸ், ா.ம.க., இரண்டகம்யூனிஸ்டகட்சிகளஎன்றமெககூட்டணி அமைத்த அ.இ.அ.ி.ு.க. 142 இடங்களிலமட்டுமபோட்டியிட்டது. ஆனால் 133 (ஒரசுயேட்சையினஆதரவையுமசேர்த்து) இடங்களிலவெற்றி பெற்றஅருதிபபெரும்பான்மையுடனஆட்சியமைத்தது. அந்தககணக்கஇப்போதுமஓடுவதாகூறப்படுகிறது.

இந்அளவிற்கே.ு.ி.க.விற்கமுக்கியத்துவமஅளித்து அ.இ.அ.ி.ு.க. தலைமசிந்திப்பதற்குககாரணம், ி.ு.க.கழற்றி விட்டுவிட்டதங்களபக்கமகாங்கிரஸவருவதற்காசாத்தியக்கூறுகளமிமிகககுறைவஎன்பதே.

ஆனால் 60 முதல் 70 இடங்களுக்கே.ு.ி.க. ஒப்புக்கொள்ளுமா? பொறுத்திருந்துதானபார்க்கவேண்டும். ஏனெனிலஇக்கட்டுரவெளியாகுமஇந்நேரத்திலுமகாங்கிரஸுடனகூட்டணி அமைக்குமமுயற்சியிலஅக்கட்சி ஈடுபட்டுள்ளது. ஆயினுமஇன்றநேற்றல்ல, கடந்ஆண்டமுதலஇரண்டகம்யூனிஸ்டகட்சிகளுமவிஜயகாந்த‘தங்கள்’ கூட்டணிக்குளஇழுக்‘பாகீரபிரயர்தனம்’ செய்தவருவதஅரசியலவட்டாரங்களநன்கஅறிந்இரகசியமாகும்.

ி.ு.க.கழற்றி விடுமகாங்கிரஸ்?

இன்றைநிலையிலஅதசாத்தியமில்லஎன்றஅரசியலநோக்கர்களகருதுகின்றனர். இதற்கஅவர்களகூறுமகாரணங்களசிந்திக்கத்தக்கவை:

1) மக்களவையிலகாங்கிரஸகட்சிக்கு 200 இடங்களஉள்நிலையில், அதனஇரண்டகூட்டணிககட்சிகளினஆதரவமுக்கியமானது. ஒன்று 19 இடங்களைககொண்திருணாமுலகாங்கிரஸினஆதரவு, மற்றொன்றி.ு.க.வின் 19 (18 + திருமாவளவன்) ஆதரவு.

2) இதிலதிருணாமுலகாங்கிரஸஉறவஅந்அளவிற்கபலமானதாஇல்லை (இன்றஅந்நிலமாறியுள்ளது. காங்கிரஸுடனகூட்டணி அமைத்தமேற்கவங்சட்டபபேரவைததேர்தலிலபோட்டியிடப் போவதாமம்தஅறிவித்துள்ளார்), ஆனாலி.ு.க.ஆதரவநிச்சயமானதாஉள்ளது. அதனால்தானஸ்பெக்டரமஊழலகுற்றச்சாற்றபெரிதாஎழுந்நிலையிலுமஅதி.ு.க. உறவகெட்டியாகபபிடித்துக்கொண்டது. அமைச்சரஇராசமீதநடவடிக்கஎதையுமஎடுக்காமலதவிர்த்தது.

3) ி.ு.க.விட்டுவிட்டு அ.இ.அ.ி.ு.க.வுடனகூட்டணி அமைத்தால் 9 மக்களவஉறுப்பினர்களஆதரவமட்டுமகிடைக்கும். அதுமட்டுமின்றி, ி.ு.க. அளவிற்கு அ.இ.அ.ி.ு.க. உறவநம்பத்தக்கதாகாங்கிரஸதலைமநினைக்கவில்லை.

4) சரதபவாரினதேசியவாதிகளகாங்கிரஸகட்சியினஆதரவவிி.ு.க.வினஆதரவஉறுதியானதஎன்பதும், மத்தியிலஇன்னமும் 4 ஆண்டுகளுக்கஆட்சிக்காலமஇருப்பதால், தமிழ்நாட்டினசட்டபபேரவைததேர்தலிற்காமத்திஆட்சியினபலத்தஆபத்திற்குள்ளாக்காங்கிரஸதலைமவிரும்பவில்லை.

5) ே.ு.ி.க.‘எப்படியாவது’ தங்களகூட்டணிக்குளகொண்டுவந்துவிவேண்டுமஎன்பதிலகாங்கிரஸகட்சி கண்ணுமகருத்துமாஉள்ளது. ஆனாலஅதற்காஅதி.ு.க.கழற்றிவிடததயாரில்லை. ே.ு.ி.க. கூட்டணிக்குளவருவதி.ு.க. தலைவருமவிரும்புகிறார். அந்தபபக்கமபோவதவிநம்பக்கமவைத்துக்கொண்டசட்டபபேரவைததேர்தலிலமுழவெற்றியஉறுதி செய்துககொள்ளலாமஎன்பதி.ு.க. தலைவரினஎண்ணமாஉள்ளது.

க, ி.ு.க.கழற்றி விட்டுவிட்டு அ.இ.அ.ி.ு.க. கூட்டணிக்ககாங்கிரஸவருமவாய்ப்பு, இன்றைநிலையில், முற்றிலுமஇல்லை.

தனதமுதலமைச்சரஆகுமகனவஇலக்கஇப்போதைக்கமறந்துவிட்டு, சட்டபபேரவையிலஒரபலமாகட்சியாஅமர்வதமுக்கியமானதாவிஜயகாந்தகருதினால் அ.இ.அ.ி.ு.க.வுடனதொகுதிபபங்கீட்டினஅடிப்படையிலே.ு.ி.க. கூட்டணி அமைக்குமவாய்ப்பஉள்ளது. இதஅவ்வளவசாதாரணமாநடந்தேறிவிடாது. கடுமையாபேரமநடக்கும்.

காங்கிரஸமாப்பிள்ளை!

ஜெயலலிதகிளப்பிவிட்எதிர்ப்பார்த்கூட்டணி பேச்சாலபெருமபயனஅடையப்போவதகாங்கிரஸே. ஜெயலலிததங்களவரவேற்கததயாராஉள்ளதைககாட்டி, சட்டபபேரவைததேர்தலவெற்றியநிர்ணயிக்கப் போகுமகட்சி நாங்களஎன்றகூறி, தங்களததொகுதி பேபலத்தகாங்கிரஸகட்சி அதிகரித்துக்கொள்ளும். கடந்தேர்தலில் 40 தொகுதிகளிலபோட்டியிட்காங்கிரஸகட்சி, இப்போது 60 முதல் 70 தொகுதிகளைககேட்கும். காங்கிரஸதனதகூட்டணியிலதக்கவைத்துக்கொள்ி.ு.க. தலைமையுமசற்றேறக்குறைஅந்அளவிற்கவிட்டுததருமவாய்ப்புமஉள்ளது. இந்தததொகுதி பேரமடெல்லியிலவிரைவிலநடந்தமுடியும். ி.ு.க. + காங்கிரஸ் + ா.ம.க. + விடுதலசிறுத்தைகளகூட்டணி உறுதியாகும்.

உளஅரசியல்!

தங்களோடகூட்டணி அமைத்துக்கொள்ளததுடிக்குமே.ு.ி.க.காங்கிரஸஎன்செய்யும்? அ.இ.அ.ி.ு.க. கூட்டணியிலசேர்ந்துவிடுமாறஆலோசனைககூறுமஎன்றும், ி.ு.க. கூட்டணியிலதாங்களபெறுமஇடங்களுக்கஇணையாக அ.இ.அ.ி.ு.க. கூட்டணியிலே.ு.ி.க.வுமகணிசமாஇடங்களைபபெற்றபோட்டியிவேண்டுமஎன்றுமகூறும். சட்டபபேரவைததேர்தலமுடிவுகளஎந்தககட்சிக்குமபெரும்பான்மையற்ஒரநிலையஉண்டாக்கினால், அப்போதஇரகட்சிகளுமஇணைந்து, ா.ம.க. உள்ளிட்கட்சிகளினஆதரவைபபெற்றஒரகூட்டணி அரசஅமைக்குமவாய்ப்பகிட்டலாம், அப்போது… தமிழ்நாட்டிலமீண்டுமகாங்கிரஸஆட்சி அமைக்கும் 40 ஆண்டுக்காகனவநிறைவேறலாம். காங்கிரஸ் + ே.ு.ி.க. + ா.ம.க. என்புதிஅணி தமிழ்நாட்டிலபிறக்கலாம்.

இப்படியுமஒரகணக்கஉள்ளது, இங்குமடெல்லியிலும். இதனை 60 ஆண்டுக்காஅரசியலமுதிர்ச்சி பெற்ி.ு.க. தலைமையுமஅறிந்தஉள்ளது.

பின்குறிப்பு: மக்களநலன், அத்‌தியாவசியபபொருட்களவிலையேற்றம், தமிழ்நாட்டினநதி நீர்பபிரச்சனைகள், ஈழததமிழரபிரச்சனஎன்றமக்களமனதவாட்டுமபிரச்சனைகளினஅடிப்படையிலஇந்தககூட்டணிகளஅமையாதஎன்றயாருமஏங்வேண்டாம். இந்தபபிரச்சனைகளெல்லாமதேர்தலுக்கானவஅல்ல. தேர்தலிற்குததேவகூட்டுமதுட்டும்தான். இரண்டாவதைத்தானஅள்ளிததருவார்களே… அப்புறமென்ன.

யார் கூட்டணி வைத்தாலும் மக்கள் ஜெயக்கப்பொவது இ‌ல்லை.

Categories: Politics

இலங்கைக்குள் ஊடுருவும் சீனா; இந்திய தேசத்துக்குப் பேராபத்து

முள்ளிவாய்க்காலை முன்வைத்து உலகமே இன்று இரண்டாகப் பிளவு பட்டு நிற்கிறது.இலங்கையில் நடந்திருக்கும் போர்க் குற்றங்களை விசாரிக்க ஐக்கிய நாடுகள் ஒரு குழுவை அமைக்க… அதை அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ஆதரிக்க… ரஷ்யாவும் சீனாவும் எதிர்த்து நிற்க… இந்தியா இன்னமும் கருத்துச் சொல்லாமல் மௌனமாக இருக்கிறது. போர் முடிவுக்கு வந்ததா கச் சொல்லப்பட்ட நிலையிலும், இன் னமும் கொடூரங்களும் கொடுமை களும் தொடர்வதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. இதுபற்றி, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானிடம் பேசினோம்.

இலங்கையில் நடந்த போர்க் குற் றங்களை விசாரிக்க, ஐ.நா. அவை மூவர் குழுவை நியமித்து இருப்பது வரவேற்கத்தக்க செய்திதானே?

எங்கள் சமூகத்தை நான்கு புறமும் சூழ்ந்து சுற்றி வளைத்துக் கொலை செய்த காலத்தில் அமைதியாக வேடிக் கை பார்த்ததும் இந்த அவைதான் என்ற வருத்தம் இருந்தாலும், இது ஆறுதலான ஆரம்பம். இந்த விசாரணையையும் எப்படியாவது தடுத்து முடக்கிவிட, இலங் கையும் அதனை ஆதரிக்கும் நாடு களும் நினைக்கலாம். அப்பாவிகளை அங்குலம் அங்குலமாக நகர்த்திக் கொண்டு போய் கடலம்மாவின் காலடி யில் வைத்து சுட்டுப் பொசுக்கிய சண்டா ளர்களைப் பழிவாங்கும் தொடக்கப் புள்ளியாக இது அமையும்!

p104a இந்தியா இதில் எந்தக் கருத்தும் சொல்லவில்லையே?

இந்தியா விரும்பிய போரை நாங் கள் நடத்தி முடித்தோம் என்று மகிந்தா ராஜபக்ஷ பகிரங்கமாக அறிவித்தார். இந்தப் போரை நடத்துவதற்கு எங்கள் நாட்டில் இருந்து மூன்று பேர்கொண்ட குழுவை அமைத்தோம். இந்தியா சார் பில், எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், ஸ்ரீவிஜயசிங் ஆகிய மூவரை நியமித்தார்கள். நாங்கள் நித்தமும் தொடர்புகொண்டு பேசித்தான் இந்த யுத்தத்தை நடத்தினோம் என்று கோத்தபாய ராஜபக்ஷ சொன்னார்.

இந்த யுத்தத்துக்காக இந்திய அரசு என்னென்ன உதவிகளைச் செய்தது என்று இலங்கை நாடாளுமன்றத்தில், அந்த நாட்டு அமைச்சர் பகிரங்கமாக அறிவித்தார். இந்தியாவுக்கு நன்றி என்ற பதாகைகளை ஏந்தி, கொழும்பு வீதிகளில் சிங்களவர்கள் ஊர்வலம் போனார்கள். இதற்கெல்லாம் இந்தியா இதுவரை கருத்துச் சொல்லவில்லையே.

அதற்கு என்ன அர்த்தம்? உண் மையைத்தானேசொல் கிறார்கள் என்று மௌனமாகிவிட்டார்கள் இப் படிப்பட்ட இந்தியா இலங்கைக்கு எதிராக எப் படிப்பேச முடியும்? ஏழு கோடித் தமிழர் களை உள்ளடக்கிய எம் தேசம் இப்ப டிப்பட்ட துரோகத்தைச் செய்யக் கூடாது என்று தானே திரும்பத் திரும்ப நாம் வீதிகளில் நின்று கத்தினோம். தமிழ், தமிழன் என்று பேசினால், அது இந் திய தேசியத்துக்கு எதிரானது என்று மத்திய ஆட்சியாளர்கள் நினைத் தார்கள். இந்தியாவின் விடுதலைக்காக எண்ணற்ற தியாகிகளைக் கொடுத் தவன் தமிழன். ஆயுதம் தூக்கிய கட்ட பொம்மன் தொடங்கி, அகிம்சை காலத்து வ.உ.சி வரை எத்தனையோ தியாகிகள் இங்கு உண்டு.

காந்தி, நேரு, நேதாஜி, திலகர், பகத்சிங், அம்பேத்கர், இந்திரா, ராஜீவ்… என்று வடபுலத்துத் தலை வர்கள் பெயரை அதிகம் வைத்துக் கொண்டவன் தமிழன். வட இந்தியாவில் எந்த காங்கி ரஸ்காரனாவது தனது பிள்ளைக்கு காமராஜ், கக்கன் என்று பெயர் வைத் திருப்பானா? வ.உ.சி பெயரோ, பெரி யார் பெயரோ உண்டா?

காவிரியில் தண்ணீர் தராவிட்டாலும், முல்லைப் பெரியாறில் முரண்டு பிடித்தாலும், என் மக்களுக்குத் துரோகம் செய்தாலும், சட்டத்துக்குக் கட்டுப்பட்டு இந்திய தேசிய எல்லைக்குள் இருக்கிற எங்களைத் துரோகிகளாகப் பார்த்தால், இழப்பு யாருக்கு என்பதைக் காலம் தான் சொல்லும்!

பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட போரில் இந்தியா உதவி செய்தது என்று பதில் தரப்படுகிறதே?

அதைத்துணிந்து சொல்வதற்கான யோக்கியதை இன்றைய ஆட்சியாளர் களுக்கு உண்டா? இதுவரை இலங்கைக் கடற்படையால் 500 தமிழ் மீன வர்கள் கொல்லப்பட்டார்களே… அவ னெல்லாம் பயங்கரவாதியா? அதை, மன்மோகன் சிங்கும் சோனியாவும் கண்டித்தார்களா? தமிழக மீனவர் களைக் கொல்கிறார்கள் என்றால், யாரும் பயப்படத் தேவை இல்லை என் ;கிறது டெல்லி. சீனாக்காரன், அருணா சலப் பிரதேசத்துக்குள் வருகிறான் என் றால் யாரும் பயப்பட வேண்டாம் என் கிறது டெல்லி. நாங்கள் எது எதற்குப் பயப்படலாம், எதற்கெல்லாம் பயப்படக் கூடாது என்று டெல்லி பட்டியல் போட்டுத் தந்தால் பரவாயில்லை.

சீமானின் சீற்றம் பாரதத்துக்கு புரியுமா

மீனவனை அடிக்கும்போது ப்ளடி இண்டியன்ஸ்… ப்ளடி தமிழன்ஸ் என்று ஒரு சிங்களவன் கத்துகிறான். நோ… நோ… பிரபாகரன் ரிலேஷன்ஸ் என்று இன்னொருவன் எடுத்துக் கொடுக் கிறான். இந்தியன் என்றாலே பிரபா கரனின் உறவுக்காரன் என்று சிங்கள வன் நினைக்கிறான். சீனாவும் பாகிஸ்தானும் உங்களுக்கு உதவி செய்கி றோம் என்று வந்தபோது மறுத்தவர் பிரபாகரன். இந்தியாவைத் தன்னுடைய தந்தையர் தேசமாக அவர் நினைத்தார். இதை இந்தியா உணர மறுத்தது.

p14a அதற்கான பலனை விரைவில் அனுப விக்கப் போகிறது. சீனாவின் காலனி ஆதிக்க நாடாக இலங்கை மாற்றப் பட்டு, பாரதத் தாயின் பாதத்தில் பள்ளம் விழப்போகிறது!

இன்றைய நிலையில் ஈழம் எப்படி இருக்கிறது?

ஏழைகள் அனைவரையும் கொன் றுவிட்டு, ஏழ்மையை ஒழித்துவிட்டதாக சொல்வதைப்போல மக்கள் அனை வரையும் கொலை செய்துவிட்டு, நாடு அமைதியாகி விட்டதாகச் சொல்கிறார்கள். மரண வாசனைக்கு மத்தியில், சிங் களத் தலைவர்கள் சும்மா இருக்க வில்லை. ஐந்து விதமான கொடூரங் களை இரக்கம் இல்லாமல் செய்ய ஆரம் பித்திருப்பதாக எனக்குத் தகவல்கள் வருகின்றன.

அம்பாந்தோட்டை என்ற இடத்தில் கப்பல் கட்டும் தளத்தை சீன அரசு அமைத்து வருகிறது. அதில் வேலை பார்க்க சீன தேசத் தில் இருந்து 25 ஆயிரம் பேர் வந்தி ருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே கைதிகளாம். ஒழுக்கமும் கட்டுப்பாடும் பின்பற்ற வேண்டிய இராணுவ வீரர்களே சீரழிவின் உச்சத்துக்குச் செல்லும் ஒரு தேசத்தில் வந்து இறங்கிய சீனக் கைதி கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதைச் சொல்ல வேண்டியது இல்லை.

வந்திருப்பதில் 5,000 பேர் சீன உள வாளிகள் என்றும், 10 ஆயிரம் பேர் சீனத் தீவிரவாதிகள் என்றும் விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். தமிழ் ஆண் மக்கள் அனைவரை யும் கொன்றுவிட்டு, சீனக் கலப்பினத் தை உருவாக்கும் திட்டத்துடன்தான் இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளாரகள். இது முதலாவது ஆபத்து. முள்வேலி முகாமில், தடுப்புக் காவல் முகாம்களில் இருக்கும் எம் தமிழ்ச் சகோதரிகளில் பலரும் இப் ;போது கர்ப்பமாக இருக்கிறார்கள். அதா வது, சிங்கள இராணுவவீரர்களின் பாலி யல் இச்சைக்குப் பயன்படுத்தப்பட்டு உள்ளார்கள். அவர்களது கருக்களைக் கலைக்கவிடாமல் கொடுமைப்படுத்து கிறார்கள். சிங்களக் கலப்பினம் பச்சையாக உருவாக்கப்பட்டுவிட்டது. இது இரண்டாவது ஆபத்து.

தமிழர் வாழ்ந்த பகுதிகள் அனைத் திலும் இருந்த தமிழ் அடையாளங்கள் அழிக்கப்பட்டு, சிங்கள மற்றும் பௌத்த அடையாளங்கள் நிறுவப்படுகின்றன. இந்துக் கோயில்கள் இருந்த இடங்களில் புத்த விகாரைகள் அமைக் கப்படுகின்றன. சிங்களக் கடைகளில் பொருட்கள் வாங்கி, புத்த சாமிகளை வணங்கித்தான் இனி தமிழன் வாழ முடியும். இது மூன்றாவது ஆபத்து. முக்கியமான மீன்பிடி இடங்கள் அனைத்தும் சீனாவுக்குத் தாரை வார்க் ;கப்பட்டதால், அவர்கள் ராட்சத இயந் திரங்கள் மூலமாக மீன்களை உறிஞ் சினால், இனி இந்திய மீனவர்கள் கடலில் பிடிக்க மீனே இருக்காது.

அதாவது, நம்முடைய நாட்டின் மீன் பிடி வர்த்தகம் முழுமையாக அழி யப்போகிறது. இங்கு பல்லாயிரக் ;கணக்கான மீனவர் வாழ்க்கையில் மண் விழப்போகிறது. இது நான்காவது ஆபத்து. பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் வடக்கில் இருப்பதால்தான், தென்ன கத்தில் மிக முக்கியமான நிறுவனங் களை மத்திய அரசு அமைத்தது. ஆனால், இன்று நம்முடைய எதிரிகள் ஈழத்தில் முழுமையாகக் கால் ஊன் றுவதால் அதிக ஆபத்து தமிழ்நாட்டுக் குத்தான். இது ஐந்தாவது ஆபத்து, இந்திய தேசத்துக்கே பேராபத்து!

கடைசிக் கேள்வி என்னவாக இருக் கும் என்று உங்களுக்கே தெரியுமே?

ம்… தலைவர் இருக்கிறாரா என்பது தானே? பிரபாகரனின் மரணச் சான்றி தழை இலங்கை அரசாங்கம் கொடுத்த பிறகும், ராஜீவ் வழக்கை இந்தியா ஏன் முடிக்கவில்லை? புலிகள் அமைப்பே இல்லாதபோது, இந்தியா ஏன் இன் னமும் தடையை நீட்டித்துக்கொண்டு இருக்கிறது? முள்ளி வாய்க்கால் முடிந ;துபோன பிறகும் முன்னரிலும் வேக மாக அடக்குமுறைகளை இலங்கை தொடர்வதற்கு என்ன காரணம்? காட் டுப் பகுதியே இருக்கக் கூடாது என்று கங்கணம் கட்டி அழிப்பதன் பின்னணி என்ன? மூன்று ஆண்டுகளுக்கு முன் னால் நான்பேசு வதற்கு அனுமதித்த கனடா, இன்று தடுப்பதற்கு என்ன அர்த்தம்?

நமக்கெல்லாம் தெரியாத விடை அவர்களுக்குத் தெரியுமப்பா. தலைவன் இருக்கிறான் என்பதை நான் நிரூபிக்கத் தேவை இல்லை. உலக நாடுகளே நிரூபித்துக்கொண்டு இருகின்றன!

Thanks : Valamburi

Categories: Public, Special, World

கரு‌ப்பானவ‌ர்க‌ள் ‌நி‌ச்சயமாக படி‌க்க வே‌ண்டியது

பலரு‌ம் தா‌ங்க‌ள் கரு‌ப்பாக இரு‌க்‌கிறோ‌ம் எ‌ன்று ஒரு த‌ா‌ழ்வு மன‌ப்பா‌ன்மையை உருவா‌க்‌கி‌க் கொ‌ள்‌கிறா‌ர்க‌ள். ஏதோ வெ‌ள்ளையாக இரு‌ப்பவ‌ர்க‌ள் ம‌ட்டு‌ம்தா‌ன் அழகாக ‌இரு‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று‌ம், கரு‌ப்பு எ‌ன்றா‌ல் வெறு‌ப்பத‌ற்கான ‌நிற‌ம் எ‌ன்று‌ம் கருது‌கிறா‌ர்க‌ள்.

இது ‌‌மிகவு‌ம் தவறு. இதனை நா‌ங்க‌ள் கூற‌வி‌ல்லை. ம‌ற்றவ‌ர்களை அழகா‌க்கு‌ம் அழகு‌க் கலை ‌நிபுண‌ர் ம‌ஞ்சு மாதாவே ந‌ம்‌மிட‌ம் கூறு‌கிறா‌ர்.

எனவே நா‌ம் கரு‌ப்பாக இரு‌க்‌கிறோ‌ம் எ‌ன்று கவலை‌ப்படுப‌வர்க‌ள் தொட‌ர்‌ந்து இ‌ந்த க‌ட்டுரையை‌ப் படி‌க்கலா‌ம்.

ம‌ஞ்சு மாதா : பொதுவாக கரு‌ப்பாக இரு‌ப்பவ‌ர்க‌ள் தா‌ங்க‌ள் கரு‌ப்பாக இரு‌ப்பதை ‌நினை‌த்து கவலை‌ப்படுவா‌ர்க‌ள். ஆனா‌ல் எ‌ன்னுடைய கரு‌த்து எ‌ன்னவெ‌ன்றா‌ல் கரு‌ப்பான தோலை‌க் கொ‌ண்டவ‌ர்க‌ள் உ‌ண்மை‌யி‌ல் ச‌ந்தோஷ‌‌ப்பட‌த்தா‌ன் வே‌ண்டு‌ம். ஏனெ‌னி‌ல் ந‌ல்ல ஆரோ‌க்‌கியமான தோ‌ல் கரு‌ப்பு‌த் தோ‌ல்தா‌ன்.

கரு‌ப்பாக இரு‌ந்தாலு‌ம் கலையாக இரு‌ப்பவ‌ர்க‌ள் பல‌ர் உ‌ண்டு. வெறு‌ம் வெ‌ள்ளை தோ‌ல் ம‌ட்டு‌ம் இரு‌ந்து‌வி‌ட்டா‌ல் அழகாக இரு‌க்க மா‌ட்டா‌ர்க‌ள். மேலு‌ம் அல‌ங்கார‌ங்க‌ள் செ‌ய்வ‌திலு‌ம், நகைகளு‌க்கு‌ம் கரு‌ப்பானவ‌ர்க‌ளு‌க்கு‌‌த் தா‌ன் அ‌திகமாக பொரு‌ந்து‌ம்.

கரு‌ப்பாக இரு‌க்கு‌ம் தோ‌லி‌ற்கு ந‌ல்ல த‌ன்மை இரு‌ப்பதை நா‌ன் பா‌ர்‌த்து‌ள்ளே‌ன். பொதுவாக கரு‌ப்பு ‌நிற‌ம் கொ‌ண்டவ‌ர்களு‌க்கு அ‌திகமாக முக‌ப்பருவு‌ம் வருவ‌தி‌ல்லை. கரு‌ப்பாக இரு‌ப்பவ‌ரி‌ன் முக‌ம் முழு‌க்க முக‌ப்பருவாக இரு‌‌ப்பதை பொதுவாக பா‌ர்‌த்‌திரு‌க்கவே முடியாது. வெ‌ள்ளையாக இரு‌ப்பவ‌ர்க‌ள் பலரு‌ம், முக‌ம் முழுவது‌ம் மு‌க‌ப்பரு வ‌ந்து அவ‌தி‌ப்படுவதை‌ப் பா‌ர்‌த்‌திரு‌ப்போ‌ம்.

கரு‌ப்பாக இரு‌ப்பவ‌ர்க‌ள், அவ‌ர்களது ‌நிற‌த்‌தி‌ற்கு ஏ‌ற்று‌க் கொ‌ள்ள‌க் கூடிய, உட‌ல் வாகு‌க்கு பொரு‌ந்து‌ம் ஆடைகளையு‌ம், அல‌ங்கார‌த்தையு‌ம் செ‌ய்து கொ‌ண்டா‌ல் அவ‌ர்களை ‌விட அழகானவ‌ர்க‌ள் வேறு யாரு‌ம் இரு‌க்க முடியாது.

வெ‌ளி‌ர் ‌நிற‌த்‌திலான ஆடைக‌ள், எ‌ளிய அல‌ங்கார‌ம் போ‌ன்றவை கரு‌ப்பானவ‌ர்களை அழகாகா‌க் கா‌ட்டு‌ம். மேலு‌ம், பொ‌ன் ‌சி‌ரி‌ப்பு‌ம், பொ‌ன் நகையு‌ம் கூட அவ‌ர்களு‌க்கு‌த்தா‌ன் இ‌ன்னு‌‌ம் அழகாக‌த் தோ‌‌ன்று‌ம். வெ‌ள்ளை‌க் க‌ல் ப‌தி‌த்த நகைக‌ள், த‌ங்க நகைக‌ள் போ‌ன்றவை வெ‌ள்ளையானவ‌ர்களை ‌விட, கரு‌‌ப்பானவ‌ர்களு‌க்கு‌த்தா‌ன் எடு‌ப்பாக‌த் தோ‌ன்று‌ம். இது அனைவரு‌ம் அ‌றி‌ந்ததே.

அதே‌ப்போல, வெ‌ள்ளையான‌வ‌ர்க‌ளி‌ன் முக‌த்‌தி‌ல் ‌சிறு மறுவோ, க‌ட்டி என எது வ‌ந்தாலு‌ம் அ‌ப்ப‌ட்டமாக வெ‌ளியே‌த் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் கரு‌ப்பானவ‌ர்களு‌க்கு அ‌ந்த ‌பிர‌ச்‌சினை இரு‌ப்ப‌தி‌ல்லை. அவ‌ர்களை எ‌ப்போது‌ம் அழகாக வை‌க்க இது ஒ‌‌ன்றே போதுமானது.

‌சில‌ பெ‌ண்க‌ள், அடு‌த்த மாத‌ம் என‌க்கு‌த் ‌திருமண‌ம், நா‌ன் கரு‌ப்பாக இரு‌க்‌கிறே‌ன், ஏதாவது செ‌ய்து எ‌ன்னை வெ‌ள்ளையா‌க்கு‌ங்க‌ள் எ‌ன்று கூறுவா‌ர்க‌ள். இதுபோ‌ன்றவ‌ர்களு‌க்கு ஒ‌‌ன்று பு‌ரிய வை‌க்க ‌விரு‌ம்‌‌பு‌கிறே‌ன். ‌பிற‌க்கு‌ம் போதே கரு‌ப்பானவ‌ர்க‌ள், ஒரு ‌சில முறைகளா‌ல் லேசாக வெ‌ள்ளை ஆகலா‌ம். ஆனா‌ல் அதுவு‌ம் அ‌திக‌ம் எ‌தி‌ர்பா‌ர்‌க்க முடியாது. முக‌த்தை அழகாக வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டுமானா‌ல் பல ‌சி‌கி‌ச்சைக‌ள் உ‌ள்ளன. ‌திடீரென வெ‌ள்ளையா‌க்க எ‌ந்த முறையு‌ம் இ‌ல்லை. எனவே, உடனடியாக வெ‌ள்ளையா‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று எ‌ந்த அழகு‌க் கலை ‌நிபுண‌ரையு‌ம் ‌நி‌ர்ப‌ந்‌தி‌க்க வே‌ண்டா‌ம். அதனா‌ல் ஏதேனு‌ம் ப‌க்க ‌விளைவுகளை ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம் முறைகளை உ‌ங்களு‌க்கு செ‌ய்து ‌வி‌ட்டா‌ல் அது ‌பிர‌ச்‌சினையா‌க முடி‌ந்து ‌விடு‌ம்.

எனவே, நம‌க்‌கிரு‌க்கு‌ம் அழகை மேலு‌‌ம் அழகா‌க்கு‌ம் ப‌ணியை ம‌ட்டு‌ம் அழகு‌க் கலை ‌நிபுண‌‌ரிட‌ம் ஒ‌ப்பு‌வி‌‌ப்பது ந‌ல்லது.

‌சில எ‌ளிதான ‌முறைகளா‌ல் நமது சரும‌த்தை பாதுகா‌க்கலா‌ம். நமது சரும‌‌த்‌தி‌ற்கு‌ம் உணவு தேவை‌ப்படு‌கிறது. அது ஆரோ‌க்‌கியமான உணவாக இரு‌க்க வே‌ண்டு‌ம். அதாவது, வார‌த்‌தி‌ல் ஒரு நாளாவது சரும‌த்‌தி‌ற்கு மு‌ல்தா‌னி மெ‌ட்டி, ச‌ந்தன‌ம், த‌யி‌ர், ம‌ஞ்ச‌ள், அ‌ரி‌சி மாவு, த‌க்கா‌ளி‌ச் சாறு, எலு‌மி‌ச்சை சாறு போ‌ன்ற எதையாவது ஒ‌ன்றை தட‌வி ஊற ‌வி‌ட்டு கழு‌வி வ‌ந்தா‌ல் இய‌ற்கையான முறை‌யி‌ல் அதே சமய‌ம் எ‌ளிய முறை‌யி‌ல் உ‌ங்க‌ள் அழகை‌ப் பேணலா‌ம்.

கரு‌ப்பான சரும‌‌ம் எ‌ன்று கவலை‌ப்படாம‌ல், ஆரோ‌க்‌கியமான சரும‌ம் எ‌ன்று ச‌ந்தோஷ‌ப்படு‌ங்க‌ள். அதுதா‌ன் உ‌ண்மை.

Categories: Special

மனநோய்க்கு அடிப்படை என்ன?

July 22, 2010 1 comment

மனோதத்துவம் (Psychology) என்றால் என்ன என்பதை அடிப்படையில் புரிந்து கொள்தல் அவசியம்.

உதாரணமாக ஒரு சிலர் தினமும் இரவு நேரத்தில் மது அருந்துவதை வழக்கமாக்கிக் கொண்டிருப்பார்கள். ஒரு நாள் மது அருந்த தவறும் பட்சத்தில் அவருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறத. தொடர்ந்து குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு காலப்போக்கில் கைநடுக்கம் போன்ற நரம்பு தளர்ச்சி பாதிப்புகள் ஏற்படத் தொடங்குகிறது. இதுவே சிலருக்கு மனநோய்க்கும் அடிப்படையாக அமைகிறது.

பொதுவாக அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளும், மனஅழுத்தமும் ஒன்றுக்கொன்று எவ்விதம் தொடர்புடையதோ, அதேபோல மனநோயும், தூக்கமின்மையும் நெருங்கிய கூட்டாளிகள் எனலாம்.

தூக்கமின்மை காரணமாக உடல் சூடு உட்பட பல்வேறு உடல் கோளாறுகள் ஏற்பட்டாலும் கூட, அதிக நாட்கள் அல்லது ஒரு நாளில் அதிக நேரம் தூக்கமின்றி இருந்தால் அது மனநோய்க்கு வித்திடும் என்பது உறுதி.

பொதுவாக மனித உடலுக்கு தினமும் 8 மணி நேர தூக்கம் அவசியமாகிறது. அது அதிகரித்தாலோ அல்லது போதிய அளவு தூக்கமின்மையாலோ மூளை சோர்வு ஏற்படுகிறது. அதனால்தான் தூக்கமின்மைக்கும், மனோவியாதிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதென உளவியல் கூறுகிறது.

பொதுவாக மனநோய் உள்ளவர்கள் மருத்துவர்களை அணுகினால், முதலில் அவர்களுக்கு அளிக்கப்படுவது நிம்மதியான உறக்கத்தை கொடுக்கக்கூடிய மாத்திரை, மருந்துகளே.

மனநோய் துவக்க நிலையில் உள்ளவர்கள் இரவு நேரத்தில் நன்றாக – போதிய அளவு தூங்கினாலே அவர்களுக்கு 90 சதவீத குணம் ஏற்பட்டு விடும்.

மனநோய் என்பது பல்வேறு நிலைகளில், அதன் தீவிரத்தைப் பொருத்து வேறுபடுகிறது.

எந்தெந்த மாதிரியான தருணத்தில் மனநோயாளிகள் பாதிப்புக்குள்ளாகிறார்கள், அவர்களின் தன்மைக்கேற்ப தீர்வு அல்லது எந்த மாதிரியான மனோதத்துவ நிபுணர்களை அணுகலாம் என்பது பற்றியெல்லாம் இப்பகுதியில் தொடருவோம்.

மனநோயின் அறிகுறிகள்!

மனநோய் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்கள், எந்தெந்த மாதிரியான தருணங்களில் மனநோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய தகவல்களை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

மனநோய்க்கும், தூக்கமின்மைக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளதையும் குறிப்பிட்டிருந்தோம். சிந்தனைத் திறன் பாதிக்கப்படும்போதே மனநோய் ஏற்படுகிறது.

நமது சிந்தனைத் திறனைக் கட்டுப்படுத்துவது உடலின் தலைமைச் செயலகமான மூளையில் உள்ள நரம்பு மண்டலமே.

ஒருவரின் சிந்தனைத் திறன் என்பது வயதிற்கேற்ப, காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது.

குழந்தைப் பருவத்தில் உள்ளவர்கள், விளையாட்டு, பள்ளிப் படிப்பு, நண்பர்கள், புதிய பொருட்களை வாங்குதல், புத்தாடை, அணிகலன்கள், புத்தகங்களைப் படித்தல் என ஒவ்வொரு வயது நிலையிலும் அவர்களது சிந்தனை பரந்து விரிந்து கொண்டே செல்கிறது. ஆனால், பெரிய அளவிலான எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது, சிலர் பித்துப் பிடித்ததைப் போல் ஆகிவிடுவர்.

சிறு குழந்தைகளே கூட, சற்றே அதட்டலாகப் பேசினால், அவர்களின் முகபாவம் மாறிவிடுவதைப் பார்க்கிறோம். மிகவும் நம்பிக்கொண்டிருந்து விட்டு, குறிப்பிட்ட ஒரு பொருளோ அல்லது பதவியோ கிடைக்காமல் போனால்கூட சிலருக்கு ஒருவித மன அழுத்தம் உருவாகக்கூடும்.

நாம் மிகவும் நேசிக்கும் ஒருவர், அதாவது தாயோ – தந்தையோ மரணம் அடைந்தால் அவர்களின் இழப்பைத் தாங்க முடியாத துயரின் காரணமாகக்கூட சிலருக்கு மனநோய் ஏற்பட வாய்ப்புண்டு. ஆழ்ந்த பற்றுடன் வாழ்ந்துவிட்டு அவர்கள் மறைந்துவிடும் போதோ அல்லது அகால மரணம் ஏற்படும்போதோ இப்படிப்பட்ட பாதிப்பு ஏற்படுகிறது.

மனஅழுத்தமும், மனநோயும் தொடர்புடையது என்று ஏற்கனவே பார்த்தோம். நரம்புமண்டலத்தில் கட்டளைகளாக பதிவாகும் விஷயங்கள், நிறைவேறாமல் போகும்போதே பெரும்பாலானோருக்கு மனநோய் ஏற்படுகிறது.

இன்னும் சிலர், கஞ்சா, அபின், பிரெளன் சுகர் போன்ற போதைப்பொருட்களை உபயோகிப்பதால் அதிகளவில் மூளை நரம்புகள் தூண்டப்பட்டு பின்னர் அது மூளையின் சொல்படி நடக்காமல் போவதாலும் மனநோய்க்கு ஆளாகின்றனர்.

அரிய நிகழ்வாக, அதிகளவு புத்தகப்புழுவாக இருப்பதால், சிந்தனை பாதிப்புக்குள்ளாகி மனஅழுத்த நோய்க்கு ஆளானவர்களையும் பார்க்கிறோம்.

எனவே மனநோய் எந்தமாதிரி, எந்த சூழ்நிலையில் ஏற்படுகிறது என்பதை விடவும், அந்த நோய் ஏற்பட்டு விட்டால்,. அதனை குணப்படுத்துவது எப்படி என்பது பற்றித்தான் நாம் யோசிக்க வேண்டும்.

முதலில் ஒருவருக்கு மனநோய் இருப்பதை எப்படி அறிந்து கொள்வது?

அதிகநேரம் – அதாவது மணிக்கணக்கில் – நாள்கணக்கில் தனிமையில் இருப்பது, யாருடனும் பேசாமல் ஒரே இடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருத்தல், சம்பந்தமின்றி தானாகப் பேசுதல் அல்லது புலம்புதல் போன்றவை இந்நோய்க்கான அடிப்படை அறிகுறிகள் எனலாம்.

நோயின் தன்மையைப் பொருத்து அறிகுறிகளும் வேறுபடலாம். சிலர் அதிக நேரம் தண்ணீரை திறந்து விட்டு குளித்துக் கொண்டேயிருப்பர். வேறு சிலர் குளிக்கவே மாட்டார்கள். இதுபோல மனநோயாளிகளுக்கான அடையாளங்கள் பல உண்டு.

முதலில் மனநோய் என்று தெரிந்தவுடன், சம்பந்தப்பட்ட நோய்க்கு சிகிச்சையளிக்கக் கூடிய மனோதத்துவ நிபுணர்களை அணுக வேண்டும்.

அவர்களின் அறிவுரைப்படி மாத்திரைகளை சாப்பிட வேண்டும். மனோதத்துவ நிபுணர்களைப் பொருத்தவரை பெரும்பாலும் கவுன்சலிங் எனப்படும் கலந்துரையாடல் மிக மிக முக்கியமானது.

நோயாளியுடன் மருத்துவ நிபுணர் பேசுவதால், பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. அதற்கேற்ப சம்பந்தப்பட்ட நோயாளிக்கு நோயின் தீவிரத்தை அறிந்து, சிகிச்சை அளிக்க முடியும்.

தனிமையை விரும்புவது மனநோயா? -டாக்டர் டி. காமராஜ்.

தகவலதொழில்நுட்பம் – ஐ.ி துறை. இந்தியாவில் ஐ.ி துறையினவளர்ச்சி எத்தனையமாற்றங்களபொருளாதாரீதியில், சமூரீதியில், பெருநகரங்களினவளர்ச்சி அடிப்படையிலஏற்படுத்திககொண்டிருக்கிறதஎனலாம்.

வாரத்தில் 5 நாளவேலை, அதிசம்பளம், விடுமுறைககொண்டாட்டம், அழுத்தத்தையும், சோர்வையுமபோக்குவதாகககூறிககொண்டஅவ்வப்போதசினிமா, விருந்து, விழா, கூடிககொண்டாடுதல் (get together) போன்றவை இந்தத் துறையில் வெகுசாதாரணமான ஒன்று.

ஆனால், ஐ.டி. நிறுவனங்களின் ஊழியர்களை மகிழ்விக்கும் நோக்கம் உண்மையிலேயே நிறைவேறுகிறதா? இதனால் ஊழியர்களுக்கு சாதகம் இருக்கிறதா? அல்லது மன அழுத்தத்தை மேலும் ஏற்படுத்துகிறதா? என்பது பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.

தனிமையை விரும்புவோர்:

சிலர் எப்போதுமே தனிமையை விரும்புவார்கள். அவர்களுக்கு நல்ல திறமை இருந்தாலும் மற்றவர்களுடன் பழகுவதற்கு மிகவும் யோசிப்பார்கள். சின்ன வயதில் நண்பர்கள் அல்லது பழகியவர்களிடம் ஏற்பட்ட ஏமாற்றம், தேவையிலாத நட்பு வேண்டாம் என்ற அறிவுரை, தன்னைப் போன்றே சிந்திப்பதற்கு யாரும் இல்லை என்ற மனப்பான்மை போன்ற ஏதாவதொரு காரணத்தால் தனிமையில் இருப்பதையே விரும்புவார்கள்.

வலிய வந்து யாராவது பேசினாலும், ஒருசில வார்த்தைகள் மட்டுமே பேசி தட்டிக்கழித்து விடுவார்கள். தனிமையில் இருப்பதே ஒருவகையான மனநோய்தான். ஆனால் அது விபரீதமான சிந்தனைகளுக்கு வழிவகுக்காதவரை பிரச்னை இல்லை.

தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி) ஊழியர்கள் பெரும்பாலான நேரம் கணினியிலேயே நேரத்தைக் கழிக்க வேண்டியிருப்பதால், பிறருடன் கலந்து பழக வேண்டியது மிகவும் அவசியம். அலுவலகத்தில் எவருடனும் பழகாமல் இருப்பதால் அவர்களது கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ள மாட்டார்கள். அதற்குப் பதிலாக உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் விடுமுறையைக் கழித்தால் உண்மையில் எவ்விதப் பிரச்னையும் உண்டாகாது.

மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கும்போது, தம்மால் சந்தோஷமாகக் கொண்டாட முடியவில்லையே என்று ஆதங்கப்படும்போது தான் பிரச்னை ஆரம்பிக்கிறது. அந்த மனத்தாங்கலே அவர்களுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தி விடக்கூடும்.

இப்படி தனிமையை விரும்புவர்கள், சில நேரங்களில் தங்களுக்குத் தாங்களே பார்ட்டி வைத்துக் கொள்வார்கள். மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கும்போது தம்மால் மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியவில்லேயே என்ற எண்ணத்தில் தனியே எங்காவது சுற்றுப்பயணம் செய்வது, தனியே மது அருந்துவது, பாக்கு, கஞ்சா போன்று ஏதாவது ஒரு போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுவதும் உண்டு.

சில நேரங்களில் அளவு தெரியாமல் குடித்து விட்டு, சாலையில் தள்ளாடி நடப்பது, கீழே விழுந்து அடிபடுவது, வாந்தி எடுப்பது போன்றவை ஏற்பட்டு மயங்கி விழக்கூடும்.

அடுத்த நாள் அவர்கள் மீதே அதிக வெறுப்பு ஏற்பட்டு பிறருடன் பேசுவதை மேலும் குறைத்துக் கொள்வார்கள். இதனால் கிட்டத்தட்ட ஒரு மனநோயாளியின் நிலைக்கே தள்ளப்படுவார்கள். எவருடனும் பழக விருப்பம் இல்லை என்பதும் உண்மையில் ஒரு மனநோய்தான் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஊருடன் ஒத்து வாழ்பவர்களால் மட்டுமே வாழ்க்கையை எளிதாகக் கொண்டு செல்ல முடியும்.

வீட்டிற்கும் தாவும

அலுவலகத் தோழர்களுடன் பேசுவதில் இருக்கும் விருப்பமின்மை நாளடைவில் வீட்டுக்கும் பரவக் கூடும். தாய், தந்தை மற்றும் உறவினர்கள் பேசினால்கூட எரிச்சலும், கோபமும் உண்டாகி தனித்தீவாக மாறி விடுவார்கள். அப்படியொரு நிலை உருவாகும் முன்பே, உரிய மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். மனதுக்குப் பிடித்தவர்கள் யாருடனாவது ஒரு சில நிமிடங்களாவது பேசுவதைக் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக பேசும் நேரத்தைக் கூட்டிக் கொள்ள வேண்டும். மனதில் இருக்கும் சோகம், துக்கம், வேதனை போன்றவற்றை அடுத்தவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போதுதான் அவை குறையும். ஆறுதல் சொல்ல நண்பர்கள் இருப்பதே பெரும் பலமாக இருக்கும்.

இவற்றுக்கெல்லாம் என்னதான் தீர்வு?

கொண்டாட்டத்தை அனுபவிக்கக்கூடிய மனநிலை இருப்பது போன்று, அதை நிறுத்துவதற்கான மனநிலையையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லா வாரமும் கொண்டாட்டம் வேண்டும் என்று அடம்பிடிக்கக் கூடாது.

ஒருவாரம் குடும்பத்துக்கு, ஒரு வாரம் பழைய நண்பர்களுக்கு என்று விடுமுறையைப் பகிர்ந்து கொண்டால் எந்தப் பிரச்னையும் வராது.

இந்த விஷயத்தில் ஐ.டி. நிறுவனங்களும் தங்களது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இதுபோன்ற கொண்டாட்டங்களை சில நிறுவனங்கள் ஊக்குவிக்கின்றன. ஊழியர்களுக்குத் தேவையான வாகன வசதி செய்து தருவது, மது மற்றும் உணவு வகைகளை ஏற்பாடு செய்வது, ஹோட்டல் ரிசார்ட்ஸ் புக் செய்வது என்றெல்லாம் ஊழியர்களை பலமாகக் கவனிக்கிறார்கள்.

இவையெல்லாம் ஊழியர்களின் நன்மைக்காகச் செயல்படுகின்றன என்றுதான் நிறுவனங்கள் சொல்கின்றன. ஆனால் நிறுவனங்களின் இத்தகைய ஏற்பாடுகள் ஊழியர்களின் வாழ்க்கையைத்தான் பாதிக்குமே தவிர, நன்மை எதையும் செய்து விடாது. ஊழியர்கள், அதலபாதாளத்தை நோக்கிப் பயணப்பட்டால், நிறுவனங்கள் கைகொடுத்து அவர்களை மீட்க வேண்டும். மாறாக அழிவுக்கான பயணத்தை விரைவுபடுத்தி விடக்கூடாது.

தன் பயமும் மனோவியாதியே!

July 22, 2010 1 comment
மனிதர்களில் பொதுவாக காணப்படும் ஒருவகை பயம் பின்னாளில் மனோவியாதியாக மாறி விடுவதுண்டு.

கமல்ஹாசன் நடித்த `தெனாலி’ படத்தில், அவர் எதற்கெடுத்தாலும் பயப்படுபவராக நடித்திருப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

சிலர் குழந்தைப் பருவத்தில் இருந்தே பயந்த சுபாவம் உள்ளவர்களாக இருப்பர். வேறு சிலர் ஏதாவதொரு நிகழ்ச்சிக்குப் பிறகு பயந்த நிலையைக் கொண்டிருப்பர்.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் அவர்கள் வளரும் முறை எனலாம். சிறிய வயதில் குழந்தைகளை பயமுறுத்துவதற்காக `பூச்சாண்டி’ என்று தொடங்கி, காலப்போக்கில் அவர்கள் வேறுவகையான பயம் அல்லது அச்சத்தை தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக் கொள்வார்கள்.

வேறு சிலருக்கு தாங்கள் செய்யும் சட்டவிரோத செயலால் பயம் தானாகவே ஏற்பட்டு விடும். அதாவது எப்போது மாட்டிக் கொள்வோமோ என்ற ஒரு பயம் இருக்கும்.

இதனால் அவர்களால் வேறு எந்தப் பணியிலும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.
வேறு சில நேரங்களில் அலுவலகங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழே பணியாற்றுபவர்களைக் கண்டு அஞ்சுவர். ஆனால் அதனை நேரிலும் வெளிப்படுத்த முடியாமல் மனோரீதியாகத் தவிப்பர்.

திறமையின்மையால் தவிப்பார்கள். மாறாக தங்கள் திறமையையும் வளர்த்துக் கொள்ளாமல், எப்போதும், ஏதாவதொரு குற்ற உணர்ச்சியுடனேயே சந்தேகக் கண்களைக் கொண்டிருப்பார்கள்.

ஏதாவது சூழ்ச்சி தங்களுக்கு எதிராக இருக்குமோ என்பதை சிந்திப்பதிலேயே அதிக நேரத்தை செலவிடுவதால், பணியை திறம்பட செய்ய முடியாமல், அதுவே அவர்களின் வேலைத் திறனைப் பாதித்து விடும்.

நாளடைவில் தங்களுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருக்கும் நிலை, மனதளவில் எரிச்சலை வரவழைத்து, எதிரில் இருப்பவர்களிடம் தேவையற்ற கோபத்தை உருவாக்கும். மன அழுத்தம் அதிகரிக்கும்.

இதன்காரணமாக மனோதிடம் பாதிக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்தில் மனோவியாதியாகி விடக்கூடிய சூழல் உருவாகும்.

எனவே மனதை குழப்பம் இல்லாமல் வைத்திருப்பதுடன், இறுக்கம் ஏற்படும்பட்சத்தில் உடனடியாக உரிய மனோதத்துவ நிபுணரை அணுகி கவுன்சலிங் எடுத்துக் கொள்ளலாம். தன்பயத்தை தவிர்த்து, தலைசிறந்து வாழ்வோம்!

எங்கே போனது பாசம்?

‘‘பெத்த மனசு பித்து; பிள்ளை மனசு கல்லு’’ என்று பெற்றோர் & பிள்ளைகள் உறவு பற்றி பேசப்படும் பழமொழிகள் நிறைய உண்டு. Ôதென்னைய வச்சா இளநீரு… புள்ளையை பெத்தா கண்ணீரு…’ என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் இப்போதும் ஒலிப்பது உண்டு. பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை இப்படி புலம்ப விடும் பிள்ளைகளை தண்டிக்க சட்டமே வந்து விட்டது. சட்டத்தின் கீழ் நிறைய பேர் தண்டிக்கப்படும் நிலையும் தொடங்கி விட்டது. ஆனாலும், சமூகத்தில் இந்த குற்றம் சத்தமின்றி தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதிலும் குடும்பம், உறவு, பாசம் என பக்கம் பக்கமாக வசனம் பேசும் தமிழகம் தான் பெற்றோரை கைவிடும் பிள்ளைகளை அதிகம் கொண்ட மாநிலங்களில் முதலிடமாம். அதிலும் தலைநகர் சென்னை தனியிடம் பிடித்திருக்கிறது.
சமீபத்தில் 104 வயது முதியவர் ஒருவர், மகனிடம் கருணை கேட்டு நீதிமன்றம் வந்திருக்கிறார் என்ற செய்தி ஒன்று போதும், பெற்றோர் & பிள்ளை உறவை சொல்ல. ஏன் இந்த நிலை? என்ன காரணம்?
கூட்டுக் குடும்ப முறை குறைந்து போனது தான் காரணமா? இல்லை, பிள்ளைகளை வளர்க்கும் முறையில் வந்த கோளாறா? எந்திரத்தனமான வாழ்க்கை என்பதால் தொலைந்து போனதோ பாசம்? எது காரணமோ தெரியவில்லை. ஆனால், ஊர்தோறும் வந்து விட்டது முதியோர் இல்லங்கள், நாகரீகத்தின் அடையாளமாக.
பிள்ளைகளை பெற்று பேணிக்காத்து, படிக்க வைத்து, வேலையும் வாங்கி கொடுத்து கல்யாணமும் செய்து வைக்கிறார்கள். ஆனால் அந்த பிள்ளைகள் சேர்ந்து 2 பேரை அதாவது பெற்றோரை கவனிக்க மனசில்லாமல் விட்டு விடுகின்றனர்.
உழைக்கும் போது இருந்த மரியாதையும், கவனிப்பும் ஓய்வு பெற்று உட்கார்ந்திருக்கும் பெற்றோர்களுக்கு கிடைப்பதில்லை. பெற்றப் பிள்ளைகள் மட்டுமின்றி பேரப் பிள்ளைகளாலும் பெரியவர்களுக்கு மரியாதை குறைவு. இப்படி மனம் புழுங்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை ஏராளம்.
‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று சொல்லி பழக்கப்பட்ட பூமி. ஆனால், அன்பும், பாசமும் அற்றுப் போய் விட்டதாலோ என்னவோ, அந்த முதல் தெய்வங்கள் இன்றைக்கு முதியோர் இல்லங்களில் தான் அடைக்கலம் கொண்டுள்ளன.

வயசாயிட்டா மானம் இருக்காதா?

விருத்தம்மாள்(80):

எனக்கு குழந்தை இல்லை. பெற்றால்தான் பிள்ளையா? இந்த இல்லத்தில் இருக்கிறவங்க எல்லாம் என் பிள்ளைங்கதான்.

மேரி(75):
திருவள்ளூர் பெரியகுப்பம் எங்க ஊரு. வீட்டுக்காரர் கொத்தனாரு. பையனுங்க 5,  ஒரு பொண்ணு. அவரு 16 வருஷத்திற்கு முன்னாடி பாண்டிச்சேரியில இருக்கிற தம்பி வீட்டுக்கு போய் செட்டிலாயிட்டார். பையன் வீட்ல இருந்தேன். அவன் போன பிறகு  மெட்ராசில் இருக்கும் மகள் வீட்டுக்கு வந்தேன். வயசாயிட்டா மானம் இருக்காதா?  அப்புறம் வீட்டு வேல செஞ்சேன். வயாசவுறத பாத்த அந்த வீட்டுக்காரங்க இங்க கொணாந்து சேத்தாங்க.

டி.குமார்(71):

சொந்த ஊர் கும்பகோணம். சமையல் செய்வேன். வடபழனியில் ஒரு ஓட்டலில் வேலை செய்தேன். 2 பிள்ளைகளுடன் தனிமரமாய் தவித்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டேன். எங்களுக்கு ஒரு பெண். 3 பிள்ளைகளையும் என் பிள்ளைகளாகவே வளர்த்தேன். எல்லோருக்கும் கல்யாணம் ஆகியவிட்டது. இளமை இருக்கும் வரை வாழ்க்கை நன்றாக போனது. வயசான பிறகு யாரும் கண்டுக்கவில்லை. எல்லாவற்றுக்கும் பிள்ளைகளின் கையை எதிர்பார்க்க வேண்டிய நிலை. மனைவியும் கண்டுகொள்ளவில்லை. இங்கு வந்துவிட்டேன். யாரும் வந்து பார்ப்பதில்லை. பேரப் பிள்ளைகள் நினைவுகள்தான் இருக்கு. இங்குள்ளவர்களிடம் பேசிப் பழகும் போது கவலைகள் காணமாமல் போய் விடுகிறது .
பால் ஜெகதீஷ்(78):

கோவை சொந்த ஊர். இந்தியாவின முதல் நிதி அமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் மகள் வயிற்றுப் பேரன் நான். நல்ல வசதி. படிப்போட எல்லா பழக்கத்தையும் கத்துக்கிட்டேன். பணமும் கரைஞ்சிடுச்சு. இளமை தந்த கர்வத்துல கல்யாணம் செய்துக்கலை. கொஞ்சம் திருந்தி செய்த வேலையிலும் காசுக்கு முக்கியத்துவம் தரவில்லை. அம்மா இருந்தவரைக்கும் கஷ்டம் தெரியவில்லை. வயசானதும் இங்க வந்துட்டேன். சொந்தக்காரங்க பார்த்துக்க தயார். என் புத்திக்கு அது ஒத்து வராது. வயாசாயிட்ட முதியோர் இல்லங்கள்தான் பெஸ்ட். அதை விட்டு விட்டு பிள்ளைங்களை கஷ்டப்படுத்திக்கிட்டு அவங்க கூடவே இருக்க கூடாது. அவங்களுக்கு ஆயிரம் வேலைகள். அதோட கூடுதலாக நம்மையும் கவனிக்கிற வேலையை செய்ய விடக் கூடாது. அது அவங்க முன்னேற்றத்தை, மகிழ்ச்சியை முடக்கி விடும்.

வறுமையில் 5 கோடி முதியோர்

Ô100 கோடியை கடந்த மக்கள் தொகையில் சுமார் 8.1 கோடி பேர் 60 வயதை கடந்த முதியவர்கள்Õ என்று சொல்கிறது முதியோர்களுக்கான தொண்டு நிறுவனமான ஹெல்பேஜ் இந்தியா. இதன் தேசிய இயக்குனர் இந்த்ராணி ராஜதுரை, Ô‘முதியோர்களின் எண்ணிக்கை இன்னும் 10 ஆண்டுகளில் 13.5 கோடியாக இருக்கும். இப்போது இருக்கும் 8.1 கோடியில் 5.1 கோடி முதியவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள். முதியவர்களில் 70 சதவீதம் பேர் படிப்பறிவு இல்லாதவர்கள். தென்னிந்தியாவில் இருக்கும் முதியவர்களில் 82 சதவீதம் பேர் போதிய ஆதரவு இல்லாத நிலையில் இருக்கின்றனர். அதேபோல் 87 சதவீதத்தினர் தொடர் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள்.

80 சதவீதத்தினர் ஓய்வூதியம் உட்பட எந்த வருவாயும் இல்லாதவர்கள். வயதானவர்களில் 60 சதவீதத்தினர் சட்ட உரிமைகள் உட்பட எந்த விவரத்தையும் அறியாதவர்கள். 52 சதவீத முதியவர்கள், தங்கள் வாரிசுகளால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள். இதில் கொடுமையான விஷயம் 40 சதவீத முதியவர்கள், கட்டாயம் வேலைக்கு சென்று பிழைக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் 70 வயதை கடந்தவர்கள்Õ’ என்று புள்ளிவிவரங்களை அடுக்குகிறார்.

தமிழகத்திற்கே முதலிடம்

வயதான காலத்தில் பெற்றோரை தவிக்க விடுவதும், புலம்ப விடுவதும், இன்றைய நாகரீக உலகில் இயல்பாகி விட்டது. அதற்கு அடையாளமாகி இருப்பது பழைமையும், பெருமையும், பண்பாட்டையும் பேசும் தமிழ்நாடு என்பது அதிர்ச்சிக்கரமான விஷயம். பெற்றோரை சரியாக கவனிக்காத மாநிலத்தில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடுதான். தமிழகத்தில் முதலிடத்தில் இருப்பது சென்னை.

சமீபத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில்தான் இந்த உண்மைகள் வெளியாகி உள்ளன. சென்னையில் 52.7 சதவீத பிள்ளைகளே பெற்றோரை அன்பாக கவனிக்கின்றனர். டெல்லி பிள்ளைகள் பரவாயில்லை. அங்கு 80 சதவீதம் பேர் தங்கள் பெற்றோரை பேணிக்காக்கின்றனர்.

பெருநகரங்களை விட பொதுவாக கிராமங்களில் பெற்றோரை நன்றாக பார்த்துக் கொள்கின்றனர். ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை நிலவுகிறது. அதில் பெரியவர்களுக்குதான் முக்கியத்துவம். அவர்களை கேட்டுதான் எந்த முடிவும் எடுக்கும் பழக்கம் இருக்கிறது. அங்கிருந்து இங்கே இடம் பெயர்ந்த மார்வாடிகள் பலரும் கூட்டு குடும்பமாகதான் வாழ்கிறார்கள்.

54 வயது மகன் மீது புகார் கொடுத்த 104 வயது தந்தை

பெற்றவர்களை வயதான காலத்தில் பாதுகாத்து பராமரிக்க வேண்டியது பிள்ளைகளின் கடமையாகும். இதிகாசங்கள் மட்டுமல்ல; உச்ச நீதிமன்றமும் இதை சொல்லியுள்ளது. உச்சகட்டமாக வளர்ப்பு பிள்ளைகளுக்கும் பெற்றோரை பாராமரிக்கும் பாதுகாக்கும் பொறுப்பு உண்டு என்றும் சில வாரங்களுக்கு முன் தீர்ப்பு சொல்லியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளை தண்டிக்கும் சட்டமும் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் 104 வயது பெரியவர் ஒருவர் கொடுத்த புகாரின் பெயரில் 54 வயது மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்தது. புளியந்தோப்பைச் சேர்ந்தவர் கன்னியப்பன்(104). இவர்தான் மகன் தங்கராஜ் மீது புகார் கொடுத்தவர். கன்னியப்பனின் கடைசி மகன் தங்கராஜ். முதல் மகன் ஜெயசந்திரன் ஏற்கனவே இறந்து விட்டார். பாஸ்டராக இருக்கும் இன்னொரு மகன் டேனியல், ஆயிரம் விளக்கு பகுதியில் தனியாகத்தான் வசித்து வருகிறார். கன்னியப்பன் வீட்டில் இப்போது தங்கராஜ் வசித்து வருகிறார்.

கைது செய்யப்பட்ட மகன், Ôநான் வேலைக்கு ஏதும் செல்வதில்லை. என் பையன்தான எனக்கு சோறு போடுகிறான். இதில் எனது அப்பாவை எங்கே கவனிப்பது?Õ என்கிறார். ஆனால் தனது மாமனாரை தன் வீட்டிலேயே வைத்து கவனித்துக் கொண்டு இருக்கிறார். தன்னை தன் பிள்ளை காப்பாற்றுவதாக சொல்பவர், தன் தந்தையை காக்க வேண்டும் என்பதை மறந்தது ஏன்?

அதிகரிக்க என்ன காரணம்?

சாவித்திரி வைத்தி (விஷ்ராந்தி முதியோர் காப்பகம்):

இனி முதியோர் இல்லங்கள் குறைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. பிறப்பு குறைகிறது. முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஒரு குடும்பம் ஒரு பிள்ளை என்ற கொள்கையும் இதற்கு காரணம். முன்பு நான்கைந்து பிள்ளைகள் இருப்பார்கள் ஒருவர் இல்லாவிட்டால், ஒருவர் பார்த்துக் கொள்வார் என்ற நிலை இருந்தது.
அந்த காலத்தில் விவசாயம் முக்கிய தொழில். ஊரை விட்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. கூட்டு குடும்ப வாழ்க்கை இருந்தது. கூட்டுக் குடும்பங்களில் எப்போதும் முதியவர்களுக்கு மரியாதை அதிகம். இப்போது அப்படி இல்லை. விளைச்சல் குறைந்து விட்டது. பிழைப்புக்காக வெளியூர் செல்ல வேண்டிய நிலை. படிப்பு, பணி காரணமாக ஆண், பெண் என இரண்டு தரப்பும் வெளியூருக்கு செல்லகின்றனர். அதனால் வீட்டில் இருக்கும் பெரியவர்களை கவனிப்பது இயலாத விஷயமாகி வருகிறது. அதுமட்டுமல்ல சில பெற்றோர்களே விரும்பி முதியோர் இல்லங்களில் சேருகின்றனர். காரணம் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் கவனிக்காதது மட்டுமில்லை. அவர்கள் போடும் கட்டுபாடுகளும் முதியோர்களுக்கு பிடிப்பதில்லை. அதேபோல் வீட்டிலுள்ள இடநெருக்கடி பிள்ளைகளுக்கு தொந்தரவாக இருக்கும் என்பதையும் சில முதியோர் காரணங்களாக சொல்கின்றனர். முதியோர் இல்லங்கள் அதிகமாகி வருவது நமது பண்பாட்டுக்கும், பழக்க வழக்கத்திற்கும் மாறானது என்றாலும், அதிகமாகி வருவதை தவிர்க்க முடியாது.

தமிழகத்தில்…

மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007 எனும் சட்டம் தமிழகத்தில் 2008 முதல் அமல்படுப்படுகிறது. 2001 கணக்குப்படி தமிழகத்தில் 55.07 லட்சம் முதியோர் உள்ளனர். இந்த 10 ஆண்டுகளில் அது 10 முதல் 20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

முதியோர் இல்லங்கள் நடத்த மாநில அரசு நிதியுதவி செய்கிறது. அரசு மானியம் பெற்ற 27 இல்லங்களும், மத்திய அரசு மானியத்துடன் 49 இல்லங்களும் உள்ளன. ஒரு இல்லத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.2 லட்சம் மாநில அரசு மானியம் தரப்படுகிறது. 2009&10ல் ரூ.60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ம் தேதி முதியோர் தின விழா கொண்டாடப்படுகிறது.

முதன்முதலாக ஸ்ரீபெரும்புதூர் அருகே திண்டல் கழனி என்ற கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பில் மாநில அரசின் சார்பில் முதியோர் இல்லம் கட்டப்படுகிறது. 160 பேர் அங்கு தங்கலாம். இதுதவிர 60 வயதுக்கு மேற்பட்ட வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஆதரவற்ற முதியோருக்கு மாநில அரசின் சார்பில் நிதியுதவித் தொகை வழங்கப்படுகிறது.

Categories: Special
Follow

Get every new post delivered to your Inbox.